அப்ப மட்டும் எங்கே போனிங்க ரஞ்சித்! இணையப் பயனாளர்கள் கேள்வி!

அப்ப மட்டும் எங்கே போனிங்க ரஞ்சித்! இணையப் பயனாளர்கள் கேள்வி!

சென்னை ஐஐடியில் சமீபத்தில் பாத்திமா லத்தீஃபா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதையும் அரசியலாக்க ஒருசிலர் முயற்சி செய்து வருகின்றனர். தற்கொலைக்கான காரணத்தை கண்டுபிடித்து இதில் யாராவது தவறு செய்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் ஒவ்வொரு சாவிலும் அரசியல் செய்யாமல் ஒரு குறிப்பிட்ட சாவில் மட்டும் அரசியல் செய்வது ஏன்? என்பதுதான் இப்போதைய கேள்வி

இந்த நிலையில் பாத்திமா தற்கொலை குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் தனது டுவிட்டரில், ‘கல்வியறிவில் சாதிப்பது பிறப்பின் அடிப்படையில் அல்ல, எவரும் சாதிக்க முடியும் என்று நிறுபிக்கும் மாணாக்களின் மன உறுதியை திட்டமிட்டே சிதைத்து கொண்டிருக்கிறார்கள். ரோகித் வெமுலாக்கள் வரிசையில் இன்று பாத்திமாலத்தீஃபா..இதை தடுத்து நிறுத்த வேண்டியது நம் எல்லோரின் கடமை!

தொடரும் உயர்கல்வி நிறுவன படுகொலைகள். சமூகத்தில் இருக்கும் பல்வேறு தடைகளை தாண்டி, கல்வியில் சாதிக்க பெரும் கனவுகளுடன் உயர்கல்வி நிறுவனங்களில் நுழையும் மாணாக்களை, இப்படி சாதி மத வெறியில் பாகுபாடு காட்டி கொல்வது தொடர்கதையாகிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் சமீபத்தில் ஒரு தனியார் பல்கலையில் மாணவிகள் ஒருசிலர் தற்கொலை செய்தபோது எங்கே போனிங்க ரஞ்சித் என்பதே இன்று இணையப் பயனாளர்களின் கேள்வியாக உள்ளது

The post அப்ப மட்டும் எங்கே போனிங்க ரஞ்சித்! இணையப் பயனாளர்கள் கேள்வி! appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy