விஷாலுடன் முதல்முறையாக இணைந்த கவுதம் மேனன்!

விஷாலுடன் முதல்முறையாக இணைந்த கவுதம் மேனன்!

விஷால், தமன்னா, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள ’ஆக்சன்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான ஆக்சன் திரைப்படமான இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால் பிரமாதமான ஓபனிங் கலெக்ஷன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இன்று விஷாலின் ஆக்சன் படம் வெளியாகும் அதே தினத்தில் விஷாலின் அடுத்த படத்தின் டைட்டிலுடன் கூடிய முதல் பார்வை சற்று முன் வெளியாகி உள்ளது. இயக்குனர் கௌதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளார். விஷால் படத்தின் தலைப்பை கவுதம் மேனன் வெளியிடுவதன் மூலம் இருவரும் முதல்முறையாக இணைந்துள்ளனர்.

இந்த படத்தின் தலைப்பு ’சக்ரா’ என்று வைக்கப்பட்டுள்ளது. விஷாலுக்கு ஜோடியாக ரெஜினா, ஸ்ரீநாத் மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே ஆகிய மூவர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நகைச்சுவை வேடத்தில் ரோபோ சங்கர் நடிக்கவுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படமும் விஷால் பாணியில் உருவாகும் ஒரு அதிரடி ஆக்சன் திரைப்படம் என்றும் கூறப்படுகிறது

Presenting the Title & First Look of #Vishal’s #Chakra @VishalKOfficial @VffVishal @ReginaCassandra @ShraddhaSrinath @thisisysr @manobalam @srushtiDange @iamrobosankar @AnandanMS15
This looks good and feels right. All the best to team CHAKRA! pic.twitter.com/byN2jILESv

— Gauthamvasudevmenon (@menongautham)

November 15, 2019

Source: Webdunia.com

Author Image
Ilayaraja