கடைசி நேர பிரச்சனை, சங்கத்தமிழன் இன்று வெளியீடு இல்லை?: அது ஏன் விஜய் சேதுபதிக்கு மட்டுமே இப்படி…

கடைசி நேர பிரச்சனை, சங்கத்தமிழன் இன்று வெளியீடு இல்லை?: அது ஏன் விஜய் சேதுபதிக்கு மட்டுமே இப்படி…

கடைசி நேர பிரச்சனை, சங்கத்தமிழன் இன்று வெளியீடு இல்லை?: அது ஏன் விஜய் சேதுபதிக்கு…
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷி கன்னா, சூரி, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடித்த சங்கத்தமிழன் படம் நவம்பர் 15ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் படம் இன்று ரிலீஸாவது போன்று தெரியவில்லை.

கடைசி நேரத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சங்கத்தமிழன் வெளியீடு நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. வெளியீடு தள்ளிப் போயுள்ளதை பார்த்த ரசிகர்கள் அது ஏன் விஜய் சேதுபதி படங்களுக்கு மட்டும் எப்பொழுது பார்த்தாலும் கடைசி நேரத்தில் பிரச்சனை எழுகிறது என்று கேட்டுள்ளனர்.

விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படத்தை பார்ப்பதற்கான 5 முக்கிய காரணங்கள்!

படம் இன்று ரிலீஸாகும் என்று தெரிவித்துவிட்டு இதுவரை இணையத்தில் அனுமதிச்சீட்டு புக்கிங் துவங்கவில்லையே, என்ன தான் நடக்கிறது. ஏன் இப்படி என்று சங்கத்தமிழன் படத்தை இன்றே பார்க்க முடிவு செய்தவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். விஜய் சேதுபதி முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளதை பார்க்க முடியவில்லையே என்று ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

பார்த்து முருகதாஸ், இதுவும் ‘அது’ மாதிரி ஆகிவிடப் போகுது: ரஜினி ரசிகர்கள் கவலை

விஜய் சேதுபதியை ஏன் இலக்கு செய்கிறார்கள் என்கிறார்கள் ரசிகர்கள். ஒவ்வொரு முறையும் அவரின் படங்கள் ரிலீஸாகும் போது ஆகுமா, ஆகாதா என்ற இழுபறி நிலை உள்ளது. சில நேரங்களில் ஏற்படும் கடைசி நேர பிரச்சனையை விஜய் சேதுபதியே தன் கைக்காசை போட்டு தீர்த்து வைத்த சம்பவங்களும் நடந்துள்ளது.

இன்று சங்கத்தமிழன் வருவான் என்று ஆசையாக காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Source: samayam

Author Image
murugan