நான் ஒன்னும் காணாமல் போகவில்லை, எல்லாம் சதி: சுசிலீக்ஸ் புகழ் சுசித்ரா விளக்கம்

நான் ஒன்னும் காணாமல் போகவில்லை, எல்லாம் சதி: சுசிலீக்ஸ் புகழ் சுசித்ரா விளக்கம்

Samayam Tamil | Updated:

நான் காணாமல் எல்லாம் போகவில்லை என்று பாடகி சுசித்ரா விளக்கம் அளித்துள்ளார்.

சுசித்ராவை காணவில்லை

image

பாடகி சுசித்ராவை கடந்த 11ம் தேதி முதல் காணவில்லை என்று அவரின் தங்கை சுனிதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சுசித்ராவின் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் காணாமல் போனது மிகுந்த கவலை அளிப்பதாக சுனிதா தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சுசித்ரா தங்கியிருந்ததை கண்டுபிடித்தனர்.

ஹோட்டலில் இருந்த சுசித்ரா

image

காவல் துறையினர் சுசித்ராவிடம் ஏன் இங்கு வந்தீர்கள் என்று கேட்டதற்கு, அம்மா வீட்டில் இருந்து திருவான்மியூரில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு கிளம்பினேன், ஹோட்டலில் சிறிது ஓய்வு எடுக்க வந்தேன் என்றார். யாரிடமும் தெரிவிக்காமல் சுசித்ரா கிளம்பியதாலும், அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முடியாமல் போனதாலும் குடும்பத்தார் கவலை அடைந்தனர். ஆனால் சுசித்ராவோ வேறு விதமாக தெரிவித்துள்ளார்.

குடும்பத்தார் மீது சுசி புகார்

image

புகார் குறித்து சுசித்ரா கூறியதாவது, நான் ஒன்றும் காணாமல் போகவில்லை. எனக்கு மனநலம் சரியில்லை என்று கூறி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சில மணிநேரம் என்னை தொடர்பு கொள்ள முடியாமல் போக என் தங்கை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தற்போது அவர்கள் என்னை அண்ணா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த புகாருக்கு பின்னால் சதி உள்ளது. என் தங்கையும், அவரின் கணவரும் மருத்துவமனைக்கு வெளியே நிற்கிறார்கள். என்னால் வெளியே செல்ல முடியவில்லை என்றார்.

பரபரப்பை ஏற்படுத்திய சுசிலீக்ஸ்

image

கடந்த 2017ம் ஆண்டு பார்ட்டி ஒன்றில் நடிகர் தனுஷ் மற்றும் நண்பர்கள் தன்னை தாக்கியதாக சுசித்ரா ட்விட்டரில் தெரிவித்தார். அதன் பிறகு கோலிவுட் பிரபலங்கள் பலரின் கசமுசா காணொளிக்கள், புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டார். இதனால் சுசிலீக்ஸ்(#suchileaks) என்கிற வலையொட்டு (ஹேஷ்டேக்) ட்விட்டரில் மிகுதியாக பகிரப்பட்டது. அதன் பிறகு அவருக்கு மனநிலை சரியில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக கூறினார்கள். சுசி லீக்ஸ் விவகாரத்திற்கு பிறகு சுசித்ராவும், அவரின் கணவரான நடிகர் கார்த்திக் குமாரும் விவாகரத்து பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: samayam

Author Image
murugan