18 வருசம் திரைப்படத்தை விட்டு விலகி மீண்டும் ரிட்டர்ன் அடித்த ராஜா

18 வருசம் திரைப்படத்தை விட்டு விலகி மீண்டும் ரிட்டர்ன் அடித்த ராஜா

பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் படத்தின் மூலம் அனைவருக்கும் தெரிந்தவர் ராஜா அதற்கு முன்பே பல படங்களில் நடித்துள்ளார் இருந்தாலும் கடலோர கவிதைகள் தான் இவரை பிரபலமாக்கியது. பல படங்களில் முறை மாப்பிள்ளையாகவும் அமெரிக்க மாப்பிள்ளையாகவும் வந்து அந்தக்கால அப்பாஸ், மாதவன் டைப்பில் 80களில் வந்து போனவர் இவர்.

சில படங்களில் இவரே முழுமையான கதாநாயகனாக இருந்துள்ளார். சில படங்களில் வில்லத்தனத்திலும் மிரட்டியுள்ளார். மணிவண்ணன் இயக்கிய இனி ஒரு சுதந்திரம் என்ற படத்தில் அப்பாவியாக வந்து பின்னர் கலெக்டராக மாறி தியாகியை கொடுமை செய்யும் கதாபாத்திரம் இவருக்கு.

பாரதிராஜா தனது அறிமுகம் என்பதால் தனது கேப்டன் மகள் படத்தில் இவரையே படத்தின் கதாநாயகனாக்கினார். அதில் வந்த எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று என்ற பாடல் மிக புகழ்பெற்றது. பாரதிராஜா இயக்கி இவர் நடித்த கருத்தம்மா படத்திலும் இவர்தான் கதாநாயகன்.

இப்படி கதாநாயகன், அமெரிக்க மாப்பிள்ளை, நான்கு கதாநாயகன்க்களில் ஒருவர், மூன்று கதாநாயகன்க்களில் ஒருவர் என பல வெரைட்டியான பாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வந்த இவர் 18 வருடமாக திரைப்படத்தில் நடிக்காமல் ஓ எம் ஆரில் உள்ள தனது மார்பிள் பிஸினஸை மட்டும் கவனித்து வந்தாராம்.

இவர் கடைசியாக நடித்த படம் முரளி, தேவயானி நடித்த கண்ணுக்கு கண்ணாக.

விக்ரமுடைய நட்பால் தற்போது ஆதித்ய வர்மா படத்தில் துருவ்வுக்கு அப்பாவாக 18 வருடம் கழித்து முகம் காட்டுகிறாராம் ராஜா.
The post 18 வருசம் திரைப்படத்தை விட்டு விலகி மீண்டும் ரிட்டர்ன் அடித்த ராஜா appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy