அஜித்தால் ஏற்பட்ட சிக்கல், சங்கத்தமிழன்’ இன்று வெளியீடு இல்லை!

அஜித்தால் ஏற்பட்ட சிக்கல், சங்கத்தமிழன்’ இன்று வெளியீடு இல்லை!

விஜய் சேதுபதி நடிப்பில், விஜய்சந்தர் இயக்கத்தில், விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்த ‘சங்கத்தமிழன்’இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு வெளியீட்டிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்த நிலையில் திட்டமிட்டபடி இன்று இந்த படம் வெளியாகவில்லை.

கடந்த தீபாவளி அன்றே ‘பிகில்’ மற்றும் ‘கைதி’யுடன் சங்கத்தமிழன்’ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்ட இந்த படம், பல்வேறு பிரச்சனைகளை சமாளித்து இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென இன்று வெளியீடு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது

அஜித் நடித்த வீரம் படத்தையும் இதே விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் ‘வீரம்’ படத்தின்போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி இன்னும் விநியோகஸ்தர்களுக்கு தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பணபாக்கி வைத்திருப்பதால் படத்தை வெளியிட சிக்கல் எற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இன்று மாலைக்குள் பேச்சுவார்த்தை முடிந்து இரவுக்காட்சி திரையிட வாய்ப்பு இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Source: Webdunia.com

Author Image
Ilayaraja