தர்பார் இசை வெளியீடு எப்போது?

ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் இடை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

 

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. 
 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்பார் படத்தின் விளம்பர ஒட்டி, சமீபத்தில் மோஷன் விளம்பர ஒட்டி ஆகியவை வெளியாகிய நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது. நடிகர் ரஜினி டப்பிங் பேசும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி மிகுதியாக பகிரப்பட்டது. 
 

தற்போது தர்பார் படத்தின் இசை வெளியிடும் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஆம், டிசம்பர் 7 ஆம் தேதி சென்னையில் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது என தகவ்ல் வெளியாகியுள்ளது. 

Source: Webdunia.com