ஜூனியர் ஆர்டிஸ்ட் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிவிட்டார்: தொலைக்காட்சிநடிகை புகார்

ஜூனியர் ஆர்டிஸ்ட் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிவிட்டார்: தொலைக்காட்சிநடிகை புகார்

ஜூனியர் ஆர்டிஸ்ட் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிவிட்டார்: தொலைக்காட்சிநடிகை புகார்
இந்தி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் நடிகை ஒருவர் தன்னுடன் சேர்ந்து பணியாற்றிய ஜூனியர் ஆர்டிஸ்ட் மீது யமுனா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கஹானி கர் கர் கி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ள அந்த நடிகை தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

ஹரியானா மாநிலம் யமுனா நகரை சேர்ந்த ஜூனியர் ஆர்டிஸ்ட் ஹோட்டல் அறையில் எனக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பிறகு நான் கர்ப்பமாகிவிட்டேன். இதையடுத்து நான் அவரிடம் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்க அவர் மறுத்துவிட்டார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நடிகை புகார் அளித்த வேகத்தில் அந்த நபர் தலைமறைவாகிவிட்டார். அவரை காவல் துறையினர் தேடி வருகிறார்கள். நடிகரின் குடும்பத்தாருக்கு நடந்த சம்பவம் குறித்து தெரிந்தும் அவர்கள் அவருக்கு ஆதரவாக உள்ளதுடன், தனக்கு உதவி செய்ய மறுப்பதாக நடிகை கூறியுள்ளார்.

நடிகையும், அந்த ஜூனியர் ஆர்டிஸ்ட்டும் மும்பையில் சந்தித்து பழகியுள்ளனர். சில நிகழ்ச்சிகளில் சேர்ந்து நடித்துள்ளனர். முதலில் நண்பர்களாக பழகியுள்ளனர்.

Source: samayam

Author Image
murugan