லோகேஷ் கனகராஜ் போல் மிமிக்ரி செய்த விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் நடிகர் விஜய், அவரைப் போல மிமிக்ரி செய்து ஒருவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 64’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஆடை பட இயக்குனர் ரத்னகுமார், லோகேஷ் கனகராஜுடன் இணைந்து திரைக்கதை எழுதுகிறார். 

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரத்ன குமாருக்கு வியப்பாக கொடுக்கும் விதமாக, நடிகர் விஜய் அவருக்கு லோகேஷ் கனகராஜ் கைபேசியில் இருந்து போன் செய்து ‘மச்சி Happy birthday டா என லோகேஷ் கனகராஜ் வாய்ஸில் மிமிக்ரி செய்துள்ளார். இது ரத்னகுமாருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தகவலை ரத்னகுமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தளபதி 64 படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

Related Tags :

Source: Malai Malar