சர்ச்சை கருத்துகள் – காயத்ரி ரகுராம் ட்விட்டர் முடக்கம்

சர்ச்சை கருத்துகள் – காயத்ரி ரகுராம் ட்விட்டர் முடக்கம்

சமூக வலைத்தளமான ட்விட்டரில் நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி சர்ச்சை கருத்துகளை பதிவு செய்ததற்காக அவரது பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

இந்து கடவுள்களை அவதூறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை நடிகை காயத்ரி ரகுராம் கடுமையாக சாடினார். ட்விட்டரில் நேரடியாக சவால் விடுத்தும் சில கருத்துகளை பதிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காயத்ரி ரகுராம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

அதையும் ட்விட்டரில் வெளியிட்டார். தனக்கு தொலைபேசியில் வரும் அழைப்புகளையும் நேரலை செய்தார். வருகிற 27-ந்தேதி மெரினாவுக்கு வருகிறேன். அப்போது திருமாவளவன் என்னை சந்தித்து விவாதிக்க தயாரா? என்றும் ட்விட்டரில் கேள்வி எழுப்பினார். திருமாவளவன் மீது காவல்துறையில் புகார் அளிப்பேன் என்றும் தெரிவித்தார்.

இந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காயத்ரி ரகுராமின் ட்விட்டர் கணக்கு திடீரென்று முடக்கப்பட்டு உள்ளது. விதி முறையை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக டுவிட்டர் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan