மீண்டும் சூர்யாவுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை

மீண்டும் சூர்யாவுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை

சூரரைப்போற்று படத்தை அடுத்து சூர்யா நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை மீண்டும் ஜோடி சேர இருக்கிறார்.

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ’சூரரைப் போற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங், ரீரிக்கார்டிங், கிராபிக்ஸ் பணிகள் நடக்கின்றன. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, மோகன்பாபு, ஜாக்கி ஷெராப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சூர்யா அடுத்ததாக அவரது 39-வது படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை ஹரி இயக்குவதாக பேசப்படுகிறது. இவர்கள் கூட்டணியில் ஆறு, வேல் படங்களும் சிங்கம் படத்தின் 3 பாகங்களும் வந்துள்ளன. பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை சமீபத்தில் திரைக்கு வந்த அசுரன் ஆகிய படங்களை எடுத்த வெற்றி மாறன் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறது.

இந்த நிலையில் கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் கூட்டணியில் 11 வருடங்களுக்கு முன்பு வாரணம் ஆயிரம் படம் வெளிவந்தது. மீண்டும் புதிய படத்தில் இணைகிறார்கள். இந்த படத்தில் சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சிங்கம் படத்தின் முதல், இரண்டாம் பாகங்களிலும் மூன்றாம் பாகத்திலும் இருவரும் ஜோடியாக நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan