Press "Enter" to skip to content

என்ன கவின் இப்படி சொல்றீங்க?: அப்போ, அதெல்லாம் பொய்யா ப்ரோ?

Web Title:doctor: kavin fans confused about sivakarthikeyan starrer

(Tamil News from Samayam Tamil , TIL Network)

1/4மருத்துவர் சிவகார்த்திகேயன்

பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு பிறகு கவினை தேடி பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அவர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் சிவா நடிக்கும் படத்திற்கு மருத்துவர் என்று தலைப்பு வைத்துள்ளனர். படத்தை கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸுடன் சேர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். இது குறித்து கவின் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார்.

2/4கவின் வாழ்த்து

மருத்துவர் படத்தின் தலைப்பு குறித்த மோஷன் விளம்பர ஒட்டியை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கவின் கூறியிருப்பதாவது, ஒரு வழியாக நெல்சன் திலிப் குமார் அண்ணாவும், சிவகார்த்திகேயன் அண்ணாவும் சேர்ந்துள்ளனர். ஒரு ரசிகனாக, தம்பியாக காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அது தான் கவின் ரசிகர்களை குழப்பம் அடைய செய்துள்ளது. காத்திருக்கிறேன் என்றால் நீங்கள் இந்த படத்தில் நடிக்கவில்லையா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

3/4எல்லாம் பொய்யா?

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கவின் கதாநாயகனாக நடிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. ஒரு வேளை மருத்துவர் படத்தில் கவின் நடிக்காவிட்டால் அவரை கதாநாயகனாக வைத்து வேறு ஒரு படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறாரோ, ஒன்னுமே புரியவில்லையே, அறிவிப்பு வெளியிடுவதை விவரமாக வெளியிட மாட்டார்களா என்று கவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி என்றால் கவின் ஏன் சிவகார்த்திகேயன், நெல்சனை சந்தித்தார் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

4/4என்ன படம்?

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி முடிந்த கையோடு கவின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றதாக சாண்டி மக்கள் விரும்பத்தக்கதுடர் தெரிவித்தார். அவர் எந்த படத்திற்காக வெளிநாட்டிற்கு சென்றார் என்று தெரியவில்லையே. கவின் ப்ரோ, லோஸ்லியா பற்றி தான் வாய் திறக்க மாட்டேன் என்கிறீர்கள், படங்கள் பற்றியாவது ஏதாவது தெரிவிக்கலாமே, ஏன் இப்படி புதிர் வைத்து எங்களை சோதிக்கிறீர்கள் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர். அவர்கள் சொல்வது நியாயம் தானே கவின்.

Source: samayam