Press "Enter" to skip to content

ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கும் யாஷிகா ஆனந்த்!

Samayam Tamil | Updated:

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார்.

கவலை வேண்டாம்

image

ஜீவா நடிப்பில் வந்த கவலை வேண்டாம் படத்தின் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இப்படத்தைத் தொடர்ந்து, துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

ஜோடி பருவம் 10

image

நோட்டா, கழுகு 2, ஜாம்பி ஆகிய படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றார். இதற்கிடையில், கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் ஆர்மிக்கு சொந்தக்காரரானார். ஜோடி பருவம் 10 நிகழ்ச்சியில் நடுவராகவும், டீம் லீடராகவும் இருந்துள்ளார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.

ஆக்ஷன் காணொளி

image

இந்த நிலையில், தற்போது தீவிரமாக சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், ஆக்‌ஷன் என்று ஒருவர் கூறும் போது, அதற்கு காலால் எட்டி உதைப்பது போன்று அந்த காணொளி காட்சி அமைந்துள்ளது. இதன் மூலம் அவர் கிளாமரை மறந்துவிட்டு ஆக்‌ஷன் அவதாரம் எடுத்துள்ளார் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இதுவரை கிளாமர் ஒர்க் அவுட்டான யாஷிகாவிற்கு இனி ஆக்‌ஷன் எப்படி இருக்கும் என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

ராஜ பீமா

image

இதற்கு முன்னதாக, விஜயசாந்தி, த்ரிஷா, அனுஷ்கா, நயன்தாரா, தமன்னா, ஜோதிகா, ரேவதி ஆகியோர் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்த நிலையில், தற்போது கிளாமர் நடிகை யாஷிகா ஆனந்தும் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்துள்ளார். தற்போது இவன் தான் உத்தமன், ராஜ பீமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Source: samayam

More from திரையுலகம்More posts in திரையுலகம் »