லதா மங்கேஷ்கர் உடல்நிலை முன்னேற்றம் – அவசர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மூச்சுத்திணறல் காரணமாக மும்பை பிரீச் கேண்டி ஆஸ்பத்திரியில் கடந்த நவம்பர் 10-ந்தேதி அனுமதிக்கப்பட்டார்.

90 வயதான அவருக்கு நெஞ்சுப்பகுதியில் ஏற்பட்ட உணவுத்தொற்றின் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டது. நிமோனியா காய்ச்சல் பாதிப்பும் இருந்ததால் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது.

இதனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையில் இப்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

லதா குடும்பத்தினர் இது பற்றி கூறியிருப்பதாவது:-

“லதா மங்கேஷ்கரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து அவர் மீண்டு விட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுவிட்டார். வயது மூப்பின் காரணமாகவே அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளோம். மற்றபடி அவர் நலமுடன் உள்ளார்”.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளார்கள்.

Related Tags :

Source: Malai Malar