நிவின் பாலி – அதிதி பாலன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

அருவி படம் மூலம் பிரபலமான நடிகை அதிதி பாலன், தற்போது நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

அருவி படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்தவர் நடிகை அதிதி பாலன். அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும் வசூலையும் வாரிக்குவித்தது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அதிதி பாலனுக்கு பல பட வாய்ப்புகள் வந்தது.

ஆனால், எதையும் ஏற்காமல் மலையாள படத்தில் ஒப்பந்தம் ஆனார். நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி பாலன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. 

’படவெட்டு’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லிஜு கிருஷ்ணா என்ற புதுமுக இயக்குநர் இயக்க இருக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

Related Tags :

Source: Malai Malar