Press "Enter" to skip to content

விஜய்யுடன் ஜூனியர் என்டிஆர் செல்போனில் பேச்சு

விஜய்யுடன் ஜூனியர் என்டிஆர் செல்போனில் பேச்சு

12/4/2019 11:54:24 AM

நடிகர் விஜய் நடித்த பிகில் படம் தீபாவளி தினத்தில் திரைக்கு வந்து வெற்றி பெற்றது. இன்னும் பல திரையரங்கம்களில் இப்படம் திரையிடப்பட்டிருக்கிறது. தெலுங்கில் விசில் என்ற பெயரில் பிகில் படம் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. அங்கும் அப்படம் வரவேற்பை பெற்றது. முன்னதாக இப்படத்துக்கு பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது. அதற்கான பொறுப்பை ஜூனியர் என்டிஆரின் பிஆர்ஓ மகேஷ் கொனேரு ஏற்றிருந்தார்.

அவர் நடிகர் விஜய்யை சென்னை வந்து நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். அப்போது விஜய்யுடன் ஜூனியர் என்டிஆர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். இதுகுறித்து மகேஷ் கூறும்போது,’விஜய்யும், ஜூனியர் என்டிஆரும் தொலைபேசியில் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். அப்போது ஆந்திராவில் விசில் படத்திற்கு தரப்பட்ட வரவேற்புக்கு விஜய் தனது மகிழ்ச்சியை அவரிடம்  தெரிவித்துக்கொண் டார்’ என்றார்.

Source: Dinakaran