Press "Enter" to skip to content

டூ பீஸில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகை; கண்டுகொள்ளாத இயக்குனர்கள்

டூ பீஸில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகை; கண்டுகொள்ளாத இயக்குனர்கள்

12/4/2019 12:23:10 PM

சிம்புவுடன் மன்மதன் படத்தில் நடித்தவர் மந்த்ரா பேடி. அடுத்து அடங்காதே படத்தில் நடித்துள்ளார். இதற்கிடையில் பிரபாஸுடன் சாஹோ படத்தில் நடித்திருந்தார். மந்த்ரா பேடிக்கு திருமணம் ஆகிவிட்டது. ஒரு குழந்தை இருக்கிறது. தற்போது 47 வயதை கடந்துகொண்டிருக்கும் மந்த்ரா பேடிக்கு ஏற்கனவே பல படங்களில் கவர்ச்சியாக நடிக்க வாய்ப்புகள் வந்தது. அதை ஏற்காமல் தவிர்த்து வந்தார். சமீபகாலமாக அவர் மனதை மாற்றிக்கொண்டிருக்கிறார்போல் தெரிகிறது.

தனது இணையதள பக்கத்தில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து படுகவர்ச்சியான படங்களை விதவிதமான போஸ்களில் வெளியிட்டு வருகிறார்.
நடிகை மல்லிகா அரோராவும் மந்த்ரா பேடியின் வயதை நெருங்கியவர் அவரும் தனது உடற்கட்டை ஃபிட்டாக வைத்திருப்பதுடன் கிக்கான படங்கள் வெளியிடுகிறார். அதேசமயம் படங்களில் வரும் வாய்ப்பை ஏற்று கவர்ச்சி காட்டி நடிக்கிறார்.

இந்த விஷயத்தில்தான் மந்த்ரா பேடி பின்தங்கி விட்டார். கிக்கான வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அதை ஏற்க மறுத்துவிட்டு தற்போது அப்படியொரு வாய்ப்புக்காக காத்திருப்பதுபோல் இணைய தளத்தில் டூபீஸ் படங்களை வெளியிட்டு வருகிறார். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தாலும் (47) வயது காரணமாக மந்த்ரா பேடியை கவர்ச்சியாக நடிக்க வைக்க இயக்குனர்கள் தயக்கம் காட்டுகின்றனர். அதனால் அவரது கவர்ச்சி படங்களை கண்டும் காணாததுபோல் இருக்கிறார்களாம்.

Source: Dinakaran

More from திரையுலகம்More posts in திரையுலகம் »