Press "Enter" to skip to content

சண்டைக்கு தயாராகும் யாஷிகா

சண்டைக்கு தயாராகும் யாஷிகா

12/4/2019 3:44:31 PM

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து பிரபலமானவர் யாஷிகா. இதையடுத்து விஜய் தேவரகொண்டா நடித்த நோட்டா, யோகி பாபு நடித்த ஜாம்பி போன்ற படங்களில் நடித்தார். தற்போது மஹத்துடன் இவன்தான் உத்தமன் மற்றும் ராஜ பீமா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இணைய தளத்தில் படுகவர்ச்சியான படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் யாஷிகாவுக்கு, கவர்ச்சி படங்களுக்காக எவ்வளவு பாராட்டு கிடைக்கிறதோ அதே அளவுக்கு டோஸ் விடுபவர்களும் இருக்கிறார்கள்.

திடீரென்று யாரும் எதிர்பாராதவிதமாக கண்டாங்கி சேலை கட்டி குணமான படமும் வெளியிட்டு திட்டியவர்களை சமாளித்து விடுகிறார். தற்போது காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் புதிய படமொன்றுக்காக சண்டை பயிற்சி செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரபரப்புடன் இருப்பதுபோலவே டிவிட்டர் பக்கத்திலும் யாஷிகா தினமும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார். நேற்று அவர் வெளியிட்ட ஒரு பதிவில் விஜயகாந்த் ஸ்டைலில் ஒற்றை காலை சுழற்றி சண்டை செய்வதுபோன்ற ஸ்டண்ட் காணொளியை வெளியிட்டார். இது ஆக்‌ஷன் காட்சிக்காக செய்யும் பயிற்சி என குறிப்பிட்டிருந்தார்.

Source: Dinakaran

More from திரையுலகம்More posts in திரையுலகம் »