Press "Enter" to skip to content

புகைப்படத்தால் ரம்யா பாண்டியனுக்கு வந்த சோதனை

சமீபத்தில் போட்டோ ஷூட் மூலம் மிகவும் பிரபலமான ரம்யா பாண்டியனுக்கு, தற்போது ஒரு புகைப்படத்தால் சோதனை ஏற்பட்டுள்ளது.

ராஜூ முருகன் இயக்கத்தில் தேசியவிருது வாங்கிய ‘ஜோக்கர்’, சமுத்திரக்கனி நடித்த ‘ஆண் தேவதை’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர், ரம்யா பாண்டியன். இவர், சமீபத்தில் தன் வீட்டு மொட்டைமாடியில் எடுத்த போட்டோ ஷூட் பரபரப்பானது.

இந்நிலையில், மேலாடை இன்றி ஒரு புகைப்படம் ரம்யா பாண்டியன் என்ற பெயரில் வெளியானது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி மிகுதியாக பகிரப்பட்டது. இதையறிந்த ரம்யா பாண்டியன், என் பெயரில் போலி ட்விட்டர் கணக்குகள் நிறைய உருவாகி இருப்பதாகவும், வெளியான புகைப்படம் தான் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் நிஜமான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை கூறி காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »