ப்ரொபோஸ் பண்ண கதாநாயகன்: காதலிக்கிற வயசா இதுன்னு கேட்ட நடிகை

ப்ரொபோஸ் பண்ண கதாநாயகன்: காதலிக்கிற வயசா இதுன்னு கேட்ட நடிகை

Samayam Tamil | Updated:

ஹீரோ ஒருவர் தனது காதலை வெளிப்படுத்த ஹீரோயின் அதை ஏற்க மறுத்துள்ளாராம்.

காதல்

image

நாடி, நரம்பு, ரத்தத்தில் நடிப்பு ஊறிப் போனவர் அந்த ஹீரோ. கேமராவுக்கு பின்னால் வெற்றி கண்ட பிறகு நடிக்க வந்து அதிலும் அசத்திக் கொண்டிருக்கிறார். மனிதருக்கு வயதாகிவிட்டாலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் அவருக்கு ஹோம்லி நடிகை மீது காதல் ஏற்பட்டுள்ளது.

என்ன வயசு?

image

காதல் வந்தால் அதை உடனே சொல்லிவிட வேண்டும் என்று முடிவு செய்தார் நடிகர். இதையடுத்து அந்த நடிகையிடம் தன் காதலை சொல்லி, திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த நடிகையோ, சார் உங்க சினிமா அனுபவம் தான் என் வயசு. நீங்க போய் இப்படி பேசலாமா என்று கேட்டு அதிர வைத்துள்ளார். ஆம், நடிகரின் சினிமா அனுபவம் தான் அந்த நடிகையின் வயசு.

காதலன்

image

நடிகைக்கு ஏற்கனவே காதலன் இருக்கிறார். அந்த காதலரை திருமணம் செய்வார் என்று முன்பே கூறப்பட்ட நிலையில் தான் அவர் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தினார். நடிகையின் காதல் முறிந்துவிட்டது என்று கூறப்பட்ட நிலையில் அண்மை காலமாக காதலர் பற்றி சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார். விரைவில் திருமணம் செய்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறப்படுகிறது.

அப்பவே தெரியும்

image

காதலை சொன்ன அந்த நடிகர் ஹோம்லி நடிகையை ஆஹா, ஓஹோன்னு புகழ்ந்து பேசியபோதே என்னமோ இருக்கு என்று பேச்சு கிளம்பியது. இந்நிலையில் தான் அவர் காதலை சொல்லி அசிங்கப்பட்டுள்ளார். கோலிவுட் பிரபலம் ஒருவர் தன்னை விட மிகவும் சின்னப் பிள்ளைகளை காதலிப்பதை பார்த்து நடிகருக்கும் அந்த ஆசை வந்துவிட்டது போன்று. ஆசை யாரை விட்டது பாஸ்.

Source: samayam

Author Image
murugan