இந்தியா ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி: ரோஹித் சர்மா ஆட்டமிழப்பு

இந்தியா ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி: ரோஹித் சர்மா ஆட்டமிழப்பு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மும்பையில் சற்றுமுன் தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச முடிவு செய்தது இதனை அடுத்து சற்றுமுன்னர் பேட்டிங் களமிறங்கிய இந்திய அணி ஐந்தாவது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. ரோஹித் சர்மா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது தவான் மற்றும் கே.எல்.ராகுல் விளையாடி வருகின்றனர். இந்திய அணி சற்றுமுன் வரை 6 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 19 ரன்கள் எடுத்துள்ளது.

இன்றைய போட்டியில் ஆடும் அணியில் உள்ள வீரர்கள் குறித்த விபரங்களை பார்ப்போம்

இந்தியா: ஷிகர் தவான், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, பும்ரா

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், ஸ்டீவன் ஸ்மித், லாபுசாஞ்சே, டர்னர், அலெக்ஸ் கேரே, ஆஷ்டன் ஆகர், கம்மின்ஸ், ஸ்டார்க், ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பா

The post இந்தியா ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி: ரோஹித் சர்மா ஆட்டமிழப்பு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy