காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு

காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு

காஞ்சிபுரம் மற்றும் செங்கற்பட்டு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் – 80 காலிப்பணியிடம்

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் முப்பத்தி ஒன்பது (39) அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் ஐந்து (5) ஒட்டுநர் பணியிடம் காலியாக உள்ளது. காஞ்சிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் ஒரு (1) அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. காஞ்சிபுரம் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் ஏழு (7) அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. காஞ்சிபுரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் இருபத்தி எட்டு (28) அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது.

சம்பளம் :

ஓட்டுனர் : ரூ. 11,250 முதல் 33,075/- வரை
அலுவலக உதவியாளர் : ரூ. 10,500 முதல் 35,150/- வரை

கல்வித் தகுதி :

8-ம் வகுப்பு தேர்ச்சி, தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்,

ஓட்டுனர் பணிக்கு விண்ணப்பிக்கிறவர்கள் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும், இலகுரக ஓட்டுநர் பணியில் இரண்டு (2) ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

18 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்ககளை சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.tamilminutes.com/wp-content/uploads/2020/01/Kanchipuram-Cooperative-Bank-Recruitment-2020-80-Office-Assistant-Posts.jpg பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.02.2020
The post காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy