ஆசிரியர் செகண்ட்லுக் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

ஆசிரியர் செகண்ட்லுக் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஒட்டு மொத்த வியாபாரமும் தற்போது முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தயாராகி வருவதால் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்த நிலையில் தற்போது நாளை மாலை 5 மணிக்கு ’மாஸ்டர்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியான ஒரு சில நிமிடங்களில் இதுகுறித்த ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரென்ட் ஆகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நாளை நாளை விஜய்சேதுபதி நடித்து வரும் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரும் வெளிவர இருக்கிறது என்பதால் ஒரே நாளில் விஜய் சேதுபதியின் இரண்டு படங்களின் போஸ்டர்கள் வெளிவரவுள்ளது என்பதும், நாளை மறுநாள் பிறந்த நாளை கொண்டாட இருக்கும் விஜய் சேதுபதிக்கு இதைவிட சிறந்த பிறந்த நாள் பரிசு வேறு இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது

Indha pongal namaku semma treat ma!

Source: Webdunia.com

Author Image
Ilayaraja