துக்ளக் விழாவில் ரஜினியின் பேச்சுக்கு உதயநிதியின் பதில்!

துக்ளக் விழாவில் ரஜினியின் பேச்சுக்கு உதயநிதியின் பதில்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று துக்ளக் 50ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசியபோது ’முரசொலி வைத்திருந்தால் திமுககாரன், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று பேசினார்

இந்த பேச்சு திமுகவினர் அதிர்ச்சி அடைய செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஜினியின் இந்த பேச்சுகுறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: ‘முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார்.

உதயநிதியின் இந்த ட்விட்டர் பதிவுக்கு ரஜினி ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும் முக ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் பொங்கல் வாழ்த்து கூறாமல் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் என்று கூறிய நிலையில் உதயநிதி ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து கூறியதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள்— Udhay (@Udhaystalin) January 14, 2020

The post துக்ளக் விழாவில் ரஜினியின் பேச்சுக்கு உதயநிதியின் பதில்! appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy