விஜய்யின் ’ஆசிரியர்’ பட செக்ண்ட் பார்வை  விளம்பர ஒட்டி வெளியீடு !

விஜய்யின் ’ஆசிரியர்’ பட செக்ண்ட் பார்வை விளம்பர ஒட்டி வெளியீடு !

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் மொத்த வியாபாரமும் முடிவடைந்துவிட்டது.

வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள இந்தப் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இந்த நிலையில் செகண்ட் லுக் வெளியாகும் முன்னரே பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் படக்குழுவினருடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

 

இந்த போஸ்டரில் விஜய், விஜய்சேதுபதி தவிர இந்த படத்தில் பணிபுரிந்த முக்கிய பிரபலங்கள் அனைவரும் உள்ளனர். இதனால் விஜய், விஜய்சேதுபதி ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

 

இருப்பினும் இன்று மாலை 5 மணிக்கு தளபதி விஜய் ரசிகர்கள் திருப்தி அடையும் வகையில் அட்டகாசமான போஸ்டர் வெளியாகவிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது வெளியான மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. விஜய் ரசிகர்கள் இந்த போஸ்டரை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

மேலும் விஜய் சேதுபதியின் புகைப்படம் இதில் வெளியாகாததால் அவரது ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

 

#MasterSecondLook pic.twitter.com/a1yUR0BoaQ

— Vijay (@actorvijay)

January 15, 2020

Source: Webdunia.com

Author Image
Ilayaraja