வெளியானது மக்கள் விரும்பத்தக்கதுடர் செகண்ட் பார்வை: இதை சத்தியமா எதிர்பார்க்கல விஜய்

வெளியானது மக்கள் விரும்பத்தக்கதுடர் செகண்ட் பார்வை: இதை சத்தியமா எதிர்பார்க்கல விஜய்

வெளியானது மாஸ்டர் செகண்ட் லுக்: இதை சத்தியமா எதிர்பார்க்கல விஜய்
பிகில் படத்தை அடுத்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டு பரிசாக வெளியானது. இதையடுத்து அன்றே செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாந்து போனார்கள்.

செகண்ட் லுக் போஸ்டர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள் பரிசாகவும், பொங்கல் பரிசாகவும் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. இதையடுத்து இன்று மாலை 5 மணிக்கு செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று லோகேஷ் கனகராஜ் அறிவித்தார்.

அதன்படி செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து கூட்டமாக நிற்க விஜய்யின் முகம் மட்டும் தெரியும்படி உள்ளது. மூச், சத்தம் போடக் கூடாது என்பது போன்று விஜய் ஒரு விரலை வாயில் வைத்துள்ளார். போஸ்டரை பார்த்தால் ஏதோ போராட்டம் போன்று தெரிகிறது.

Happy pongal nanba #MasterSecondLook https://t.co/0Q2FlENBOM

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh)

1579087899000

பட்டாஸ் சரவெடியா, புஸ்வானமா இல்லை நமத்துப் போச்சா?: விமர்சனம்

போஸ்டரை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

செகண்ட் லுக் போஸ்டர் மாஸாக உள்ளது. விஜய் சேதுபதி இருப்பார் என்று அல்லவா எதிர்பார்த்தோம். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் நன்றாக உள்ளது. வேற லெவலாக இருப்பதுடன் படத்தின் மீதான ஆவலை தூண்டிவிடும் வகையில் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

மரண மாஸ், செம, சும்மா கிழி, சூப்பர் ஹிட்: பட்டாஸ் ட்விட்டர் விமர்சனம்

செகண்ட் லுக் போஸ்டரில் விஜய் கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லை என்றால் இருக்கு வேடிக்கை என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்த நிலையில் இப்படி ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: samayam

Author Image
murugan