திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பிளவு: துரைமுருகன் பேட்டியால் பரபரப்பு

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பிளவு: துரைமுருகன் பேட்டியால் பரபரப்பு

திமுக கூட்டணி தர்மத்தை கடைப் பிடிக்கவில்லை என உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன் காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் வெளியிட்ட அறிக்கையால் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது

திமுகவுடன் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என கேஎஸ் அழகிரி அவ்வப்போது தெரிவித்து வந்த போதிலும் திமுக தரப்பில் இருந்து பாசிட்டிவான கருத்துக்கள் வெளியாகவில்லை

ஏற்கனவே இந்த கூட்டணி கிட்டத்தட்ட பிளவு பட்டது போல் டிஆர் பாலு ஒரு கருத்தை கூறிய நிலையில் தற்போது திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்கள் பேட்டி அளித்த போது ’திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலை இல்லை என்று கூறியுள்ளார்

இதனால் நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி தேர்தலிலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது
The post திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பிளவு: துரைமுருகன் பேட்டியால் பரபரப்பு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy