ஹரிவராசனம் விருதை பெற்றார் இளையராஜா

ஹரிவராசனம் விருதை பெற்றார் இளையராஜா

இசைஞானி இளையராஜாவுக்கு கேரள அரசு சபரிமலை சன்னிதானத்தில் ஹரிவராசனம் விருது கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது.

மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஹரிவராசனம் விருதை கேரளா அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. இந்த விருதில் ரூ.1 லட்சம் பணம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும்.

கடந்த வருடம் ஹரிவராசனம் விருதை பாடகி பி.சுசிலாவுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஹரிவராசனம் விருது   இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. சபரிமலை சன்னிதானத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ‘வணக்கத்துக்குரிய இசைஞானி’ என்ற பட்டமும் வழங்கப்பட்டது. ஹரிவராசனம் விருது பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ், கே.எஸ்.சித்ரா உள்ளிட்டோருக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan