காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் இத்தனை தொகுதிகளில் ஜெயித்திருப்பீர்களா? காங்கிரஸ் கேள்வி

காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் இத்தனை தொகுதிகளில் ஜெயித்திருப்பீர்களா? காங்கிரஸ் கேள்வி

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை எப்படியாவது கழட்டி விட வேண்டும் என திமுக தரப்பினர் ஏற்கனவே முயற்சித்து வந்த நிலையில் கேஎஸ் அழகிரி வெளியிட்ட அறிக்கையை அதற்கு ஒரு சாக்காக அமைந்து விட்டது

இந்த நிலையில் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சியை கிட்டத்தட்ட விலக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஓட்டு சதவீதம் இல்லை என துரைமுருகன் கூறியிருப்பது காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி இல்லையெனில் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் துரைமுருகனின் மகன் சொற்ப வாக்குகளில் வெற்றி பெற்றிருப்பாரா? என்ற கேள்வியை காங்கிரஸ் தலைவர்கள் எழுப்பி வருகின்றனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியின் வெற்றிக்கு காங்கிரஸ் கட்சியை காரணமாக இருந்திருக்கிறது என்று கூறி ஒரு சில ஆதாரங்களையும் அக்கட்சியினர் வெளியிட்டுள்ளனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

The post காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் இத்தனை தொகுதிகளில் ஜெயித்திருப்பீர்களா? காங்கிரஸ் கேள்வி appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy