இந்தியன் பணம்யில் லட்சுமி படம்: சுப்பிரமணியம் சுவாமி ஐடியா

இந்தியன் பணம்யில் லட்சுமி படம்: சுப்பிரமணியம் சுவாமி ஐடியா

இந்திய கரன்சியில் மகாத்மா காந்தி படத்திற்கு பதிலாக லட்சுமியின் படம் அச்சடித்தால் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் என்றும் பணவீக்கம் குறையும் என்றும் ராஜசபா எம்பியும் பாஜக பிரமுகருமான சுப்பிரமணியசாமி கருத்து தெரிவித்துள்ளார்

இந்தியாவில் பணவீக்கம் நாளுக்குநாள் கட்டுப்படுத்த முடியாத வகையில் இருந்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த இந்திய கரன்சியில் லட்சுமியின் படம் அச்சடிக்க வேண்டும் என்றும் அவ்வாறு ஒரு திட்டம் கொண்டு வந்தால் அதற்கு தான் முழு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்

ஏற்கனவே இந்தோனேசியா நாட்டின் கரன்சியில் விநாயகர் படத்தை இருப்பதால் தான் அந்த நாட்டிற்கு எந்த தடையும் இல்லை என்றும் விநாயகர் தடைகளை தகர்ப்பவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

பல மதத்தினர் வாழும் மக்களின் கரன்சியில் ஒரு குறிப்பிட்ட மதத்தின் கடவுள் இருந்தால் அது பிரச்சினை கூடியதாக இருக்கும் என சுப்பிரமணியன் சாமி கருத்துக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
The post இந்தியன் கரன்சியில் லட்சுமி படம்: சுப்பிரமணியம் சுவாமி ஐடியா appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy