காங்கிரஸ் இனிமேலாவது தன்மானத்துடன் நடந்து கொள்ளுமா? அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

காங்கிரஸ் இனிமேலாவது தன்மானத்துடன் நடந்து கொள்ளுமா? அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ’உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்தை திமுக கடைபிடிக்கவில்லை என்று கூறினார். இந்த அறிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு முடிவு கட்டும் வகையில் அமைந்தது

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கிட்டத்தட்ட இல்லை என்று என்ற வகையில் டிஆர் பாலு மற்றும் துரைமுருகன் ஆகியோர் சமீபத்தில் பேட்டி அளித்ததும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் விலகினாலும் எந்த கவலையும் இல்லை என்று துரைமுருகன் கூறியது காங்கிரஸ் தலைவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த நிலையில் துரைமுருகனின் கருத்துக்கு பின்னராவது காங்கிரஸ் தன்மானத்துடன் நடந்துகொள்ளவேண்டும் என இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியினர் தன்மானத்துடன் அதிரடி முடிவு எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
The post காங்கிரஸ் இனிமேலாவது தன்மானத்துடன் நடந்து கொள்ளுமா? அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy