கிழியும் தாரை தப்பட்டை – விஜய் சேதுபதி வெளியிட்ட மக்கள் விரும்பத்தக்க செகண்ட் பார்வை!

கிழியும் தாரை தப்பட்டை – விஜய் சேதுபதி வெளியிட்ட மக்கள் விரும்பத்தக்க செகண்ட் பார்வை!

ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் விஜய் சேதுபதியின் ”  யாதும் ஊரே யாவரும் கேளிர் ” படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் பொங்கல் தினத்தின் ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. பேராண்மை, ஈ, புறம்போக்கு போன்ற வித்யாசமான வெற்றிப்படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.    
 

விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கும் இப்படத்தில்  நடிகை மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் வில்லனாக இயக்குநர் மகிழ் திருமேனி நடிக்கிறார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்த கதையில் சர்வதேசஅளவிலான பிரச்சனை அழுத்தமாக பேசுகிறது. 

 

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். பொங்கல் தினத்தின் ஸ்பெஷனாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டரில் விஜய் சேதுபதி தாரை தப்பட்டை வெறித்தனமாக அடிக்கிறார். 

#YaadhumOoreYaavarumKelir Second Look [email protected] @cineinnovations @roghanth @akash_megha @Actor_Vivek @jayam_mohanraja @nivaskprasanna @raguadityaa @designpoint001 @rkajay94 @onlynikil @CtcMediaboy pic.twitter.com/2R3UR1sxNG

— VijaySethupathi (@VijaySethuOffl)

January 15, 2020

Source: Webdunia.com

Author Image
Ilayaraja