பிரபல இயக்குனர்களின் இணைய தொடரில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ்

பிரபல இயக்குனர்களின் இணைய தொடரில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழில் வெற்றிப் படங்களில் நடித்து வரும் கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் பிரபல இயக்குனர்கள் இயக்கும் வெப் தொடரில் நடிக்க இருக்கிறார்கள்.

சினிமாவை அடுத்து வெப் தொடர்கள் ரசிகர்களை ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளன. இந்தியில் ஆரம்பித்த இந்த வெப் தொடர் மோகம் தமிழ், தெலுங்கிலும் பரவி உள்ளது. முன்னணி நடிகர், நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க வருகிறார்கள். ஜெயலலிதாவின் வாழ்க்கை வெப் தொடராக வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

சத்யராஜ், பிரசன்னா, பாபிசிம்ஹா, நித்யாமேனன், பிரியாமணி, மீனா, தமன்னா இந்தி நடிகர்கள் அக்‌ஷய்குமார், அர்ஜுன் ராம்பால், ஜாக்கி ஷாரப். அபிஷேக் பச்சன், நவாஜூதின் சித்திக், விவேக் ஓபராய், நடிகைகள் கியூமா குரோஷி, கியாரா அத்வானி ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் கதிர், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் புதிய வெப் தொடரில் நடிக்க உள்ளனர். இவர்கள் நடிக்கும் வெப் தொடரை புஷ்கர் காயத்ரி இயக்குகின்றனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan