விஜய் சேதுபதி பிறந்தநாள்: ஏமாற்றிய மக்கள் விரும்பத்தக்கதுடர், சர்பிரைஸ் கொடுத்த யாதும் ஊரே யாவரும் கேளிர் டீம்

விஜய் சேதுபதி பிறந்தநாள்: ஏமாற்றிய மக்கள் விரும்பத்தக்கதுடர், சர்பிரைஸ் கொடுத்த யாதும் ஊரே யாவரும் கேளிர் டீம்

Samayam Tamil | Updated:

இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய் சேதுபதிக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விஜய் சேதுபதி

image

விஜய் சேதுபதி இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் புதுமுகம் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கி வரும் துக்ளக் தர்பார் பட செட்டில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை படக்குழுவுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். மக்கள் செல்வனுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மாஸ்டர்

image

விஜய் சேதுபதி பிறந்தநாள் ஸ்பெஷலாக மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று கூறப்பட்டது. அந்த போஸ்டரில் விஜய் சேதுபதி இருப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் நேற்று வெளியான மாஸ்டர் செகண்ட் லுக் போஸ்டரில் விஜய் தான் இருந்தார். இதை பார்த்து விஜய் சேதுபதி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

image

விஜய் சேதுபதி பிறந்தநாளுக்கு மாஸ்டர் படக்குழு ஏமாற்றம் அளித்தாலும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படக்குழு செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. அந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் எங்களுக்கு இது போதும் என்று தெரிவித்துள்ளனர். வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் தான் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்து

image

விஜய் சேதுபதிக்கு அவர் ரசிகர்கள் மட்டும் இன்றி பிற நடிகர்களின் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தெலுங்கு நடிகர்களின் ரசிகர்களும் கூட விஜய் சேதுபதியை வாழ்த்தியுள்ளனர். ஹேட்டர்ஸே இல்லாதவர் விஜய் சேதுபதி என்று ரசிகர்கள் பெருமையாக கூறி வருகிறார்கள்.

Source: samayam

Author Image
murugan