விஜய் சேதுபதிக்கு வெயிட்டான பிறந்தநாள் பரிசு கொடுத்த “ஆசிரியர்” படக்குழு

விஜய் சேதுபதிக்கு வெயிட்டான பிறந்தநாள் பரிசு கொடுத்த “ஆசிரியர்” படக்குழு

கைதி படத்தை தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். 
 

ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை தினத்தை குறிவைத்து வெளியாகவுள்ள இப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. 

 

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு மாஸ்டர் படக்குழு வெறித்தனமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது விஜய் சேதுபதியின் நியூ லுக் போன்றே தெரியவில்லை நியூ லுக் போஸ்டரை வெளியிடுங்கள் என கூறி கலாய்த்து வருகின்றனர். இன்னும் சிலர் இது தான் அந்த 3ம் லுக் போஸ்டரா…? என ஆளாளுக்கு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

Happy birthday to our dearest Makkal Selvan, @VijaySethuOffl !

Source: Webdunia.com

Author Image
Ilayaraja