புது மருகனுடன் சிறப்பு பொங்கல் கொண்டாடிய ரஜினி – சூப்பர் மிகுதியாக பகிரப்பட்ட புகைப்படம் இதோ!

புது மருகனுடன் சிறப்பு பொங்கல் கொண்டாடிய ரஜினி – சூப்பர் மிகுதியாக பகிரப்பட்ட புகைப்படம் இதோ!

தமிழ் சினிமாவின் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு சவுந்தர்யா , ஐஸ்வர்யா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டார். இளைய மகள் சவுந்தர்யா 2010 ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அஷ்வினுக்கும், சௌந்தர்யாவிற்கும் தேவ் என்ற மகனும் இருக்கிறார்.
 

பின்னர் இருவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பராசப்ர மனதுடன் விவாகரத்து செய்துவிட்டனர். அதையடுத்து சவுந்தர்யா ரஜினிகாந்த் விசாகன் என்பவரை கடந்த வருடம் மறுமணம் செய்துகொண்டார். 
 

இந்நிலையில் தற்போது பிரபலங்கள் அனைவரும் பொங்கல் தினத்தை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் தற்போது ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா தனது கணவர் மற்றும் மாமனார், மாமியாருடன் பொங்கல் வைத்து கொண்டாடியதுடன் தனது அம்மா வீட்டிலும் கணவனுடன் சேர்ந்து தல பொங்கலை கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Source: Webdunia.com

Author Image
Ilayaraja