தர்பார் ஜஸ்ட் மிஸ்ஸு, தயாரிப்பாளர் எஸ்கேப்: ரஜினியை கலாய்க்கும் இணையப் பயனாளர்கள்

தர்பார் ஜஸ்ட் மிஸ்ஸு, தயாரிப்பாளர் எஸ்கேப்: ரஜினியை கலாய்க்கும் இணையப் பயனாளர்கள்

Samayam Tamil | Updated:

ரஜினி துக்ளக் விழாவில் பேசியதால் ஏற்பட்டுள்ள சர்ச்சையை பற்றி தான் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தர்பார்

image

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் கடந்த 9ம் தேதி ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. படம் ரிலீஸாகும் வரை ரஜினி எந்த பேட்டியும் அளிக்கவில்லை. நாட்டு நடப்புகள் குறித்து கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் தாக்கப்பட்டதற்கு அவருடன் சேர்ந்து நடித்த ஹீரோயின்கள் எல்லாம் கண்டனம் தெரிவித்தார்கள்.

பேட்டி

image

நடிகைகளே தைரியமாக கண்டனம் தெரிவிக்கிறார்கள். ஆனால் ஒரு சீனியர் ஹீரோவாக இருந்து கொண்டு இப்படி அமைதியாக இருக்கிறாரே என்று விமர்சனம் எழுந்தது. படம் ரிலீஸாகும் வரை தெய்வமே பேட்டி எதுவும் கொடுக்க வேண்டாம் என தயாரிப்பு தரப்பு ரஜினியிடம் கேட்டுக் கொண்டதாக மீம்ஸ் போட்டு சமூக வலைதளங்களில் கலாய்த்தார்கள்.

துக்ளக் விழா

image

துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழா கடந்த 14ம் தேதி நடந்தது. அதில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முரசொலியை வைத்திருந்தால் தி.மு.க.காரன் என சொல்லிவிடலாம். துக்ளக்கை வைத்திருந்தால் அவர் அறிவாளின்னு சொல்லிடலாம் என்று ரஜினி பேசியது பலருக்கும் பிடிக்கவில்லை. இதையடுத்து ரஜினியை சமூக வலைதளங்களில் விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.

நல்ல வேளை

image

மீம்ஸ் கிரியேட்டர்களோ தர்பார் பட தயாரிப்பாளர் சந்தோஷப்படுவார். இதே ரஜினி தர்பார் ரிலீஸுக்கு முன்பு இப்படி பேசியிருந்தால் அதன் பாதிப்பு வசூலில் தெரிந்திருக்கும். நல்ல வேளை அவர் ரிலீஸுக்கு முன்பு எதையும் பேசவில்லை என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்கிறார்கள். இதை பார்க்கும் ரஜினி ரசிகர்களோ, இதுக்கெல்லாம் அசந்து போகும் ஆளா அவர் என்று தெரிவித்துள்ளனர்.

Source: samayam

Author Image
murugan