பட்டாஸ் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

பட்டாஸ் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

நடிகர் தனுஷ் அசுரன் படத்தின் அசாத்திய வெற்றிக்கு பிறகு தற்போது “பட்டாஸ் ” படம் வெளியாகி உள்ளது. 

 

செந்தில்குமார் இயக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக சினேகா, மெஹரீன் பிர்சாடா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். 
 

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த இப்படத்திற்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 
 

இந்நிலையில் இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் ரூ. 6.5 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

Source: Webdunia.com

Author Image
Ilayaraja