ரஜினி குறித்த வதந்திக்கு அண்டை நாட்டு அரசு விளக்கம்

ரஜினி குறித்த வதந்திக்கு அண்டை நாட்டு அரசு விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்த வதந்தி ஒன்றுக்கு இந்தியாவின் அண்டை நாட்டு அரசு ஒன்று விளக்கமளித்துள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் இலங்கை செல்ல விசாவுக்கு விண்ணப்பம் செய்ததாகவும் ஆனால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு அவருக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுத்து விட்டதாகவும் கூறப்பட்டது

இந்த தகவல் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து இலங்கை அரசு தற்போது விளக்கமளித்துள்ளது

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இலங்கை வருவதற்காக விசாவுக்காக விண்ணப்பம் செய்யவில்லை என்றும் அவருக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுத்து விட்டதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து ரஜினிக்கு விசா மறுக்கப்பட்ட செய்தி வதந்தி என்பது உறுதியாகியுள்ளது
The post ரஜினி குறித்த வதந்திக்கு அண்டை நாட்டு அரசு விளக்கம் appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy