விஜய்யின் ‘ஆசிரியர்’ செய்த மிகப்பெரிய சாதனை!

விஜய்யின் ‘ஆசிரியர்’ செய்த மிகப்பெரிய சாதனை!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் நேற்று வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் டுவிட்டர் இணையதளத்தில் ஒரு மில்லியன் ஹேஷ்டேக்குகளை பெற்றுள்ளது என்ற தகவல் தற்போது வந்துள்ளது

அதிகம் ஹேஷ்டேக்குகளை பெற்ற செகண்ட் லுக் போஸ்டர் என்ற பெருமையை இந்த போஸ்டர் பெற்றுள்ளதாக டுவிட்டர் இணைய தளமே முறைப்படி அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மாஸ்டர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இதே போன்ற ஒரு சாதனையை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது லுக் போஸ்டரும் அதே பெருமையை பெற்றுள்ளது. ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே, படப்பிடிப்பு முடியும் முன்னரே சாதனைகளை செய்து வருவது விஜய் படத்திற்கு மட்டுமே நடக்கும் என அவரது ரசிகர்கள் பெருமையுடன் தெரிவித்து வருகின்றனர்

Source: Webdunia.com

Author Image
Ilayaraja