பாடகர் அவதாரம் எடுத்த கவுதம் மேனன்!

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கி வரும் குயின் என்ற தொலைக்காட்சித் தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரியலான இந்த சீரியல் இன்னும் சில வாரங்களில் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் எனப் பல அவதாரங்களில் கோலிவுட் திரையுலகில் கோலோச்சி வரும் கவுதம் மேனன் அடுத்ததாக பாடகர் அவதாரத்தையும் எடுத்துள்ளார்.

சித்தார்த், யோகிபாபு நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ’டக்கர்’ என்ற திரைப்படத்திற்காக கவுத மேனன் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை பிரபல பாடகர் சித் ஸ்ரீராமும் இணைந்து பாடியுள்ளார் அவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரவுள்ளது

சித்தார்த், யோகிபாபு, திவ்யன்ஷா, அபிமன்யூ சிங், விக்னேஷ் காந்த், ராம்தாஸ் உள்பட பலர் நடித்துள்ள ‘டக்கர்’ திரைப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். கார்த்திக் கிரிஷ் இயக்கத்தில் வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவில் கெளதம் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது

Source: Webdunia.com

Author Image
Ilayaraja