அந்த காட்சியில் நடித்தபோது மிகவும் பதட்டமாக இருந்தது – சிருஷ்டி டாங்கே

அந்த காட்சியில் நடித்தபோது மிகவும் பதட்டமாக இருந்தது – சிருஷ்டி டாங்கே

அந்த காட்சியில் நடித்தபோது மிகவும் பதட்டமாக இருந்தது என்று நடிகை சிருஷ்டி டாங்கே சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன், சிருஷ்டி டாங்கே நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ராஜாவுக்கு செக். எஸ்டிசி நிறுவனம் வெளியிட்ட இந்த படத்தில் சிருஷ்டி டாங்கே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து இருந்தார். ஒரு காட்சியில் நிர்வாணமாகவும் நடித்து இருந்தார். அவரது இந்த அர்ப்பணிப்புக்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது. 

அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: சாய்ராஜ்குமார் அந்த சர்ச்சைக்குரிய காட்சியும் சொன்னார். நான் தயங்கினேன். அந்த காட்சி கதைக்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதையும் எப்படி எடுக்க இருக்கிறோம் என்பதையும் அவர் விளக்கியதால் சம்மதித்தேன். அந்த காட்சியில் நடித்தபோது மிகவும் பதட்டமாக இருந்தது. ஆனால் படத்தில் மிக முக்கியமான காட்சியாக அதை பார்க்கும்போது நடித்ததன் முக்கியத்துவம் புரிந்தது. 

ராஜாவுக்கு செக் படம் பேசும் பெண்கள் பாதுகாப்பு என்பது இன்றைக்கு மிகவும் முக்கியமான, அவசியமான ஒரு விஷயம். பெண்களுக்கு நடக்கும் தாக்குதல்கள், பலாத்காரங்களுக்கு ஆண்கள் தானே காரணம். அவர்களை தான் நாம் கண்டிக்க வேண்டும். பதிலாக பெண்களை தான் நாம் குறை சொல்கிறோம். அது தவறு. 

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். அப்போதுதான் பெண்களை அவள் அனுமதி இல்லாமல் தொட பயப்படுவார்கள். சமீபத்தில் கூட 8ஆம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியரே பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். இதை எல்லாம் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. பெண்கள் தங்களுக்கு நடக்கும் இதுபோன்ற கொடுமைகளை துணிச்சலாக வெளியில் பேச முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan