எதிர்பார்த்தபடியே திடீரென பின்வாங்கிய ‘சர்வர் சுந்தரம்’

தமிழ் திரையுலகில் கடந்த பல வருடங்களாக ஒரு ஹீரோ நடித்த இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வாரமும் 5 முதல் 8 படங்கள் வரை ரிலீசாகி கொண்டு இருப்பதால் கடுமையான போட்டி காரணமாக ஒரு சில மாதங்கள் இடைவெளி விட்டே ஒரே நடிகரின் திரைப்படங்கள் வெளியாகி வந்தன

 

இந்த நிலையில் சந்தானம் நடித்த டகால்டி மற்றும் சர்வர் சுந்தரம் ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஜனவரி 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோலிவுட் திரையுலகம் ஆச்சரியம் அடைந்த நிலையில் இரண்டு படங்களின் புரமோஷன்களும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் உண்மையிலேயே ஜனவரி 31ம் தேதி இந்த படங்கள் ரிலீசாகி விடும் என்றுதான் கருதப்பட்டது

 

ஆனால் திடீர் திருப்பமாக சர்வர் சுந்தரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 14 என மாற்றப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து சந்தானம் நடித்த டகால்டி திரைப்படம் மட்டுமே வரும் வெள்ளியன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

 

ஒவ்வொரு சந்தானம் படம் வெளியாகும் போதெல்லாம் ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுவதும் அதன்பின்னர் ஒத்திவைப்பதுமாக இருப்பதால் இந்த படத்தின் உண்மையான ரிலீஸ் தேதிதான் என்ன? என்பதுதான் தற்போது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

Source: Webdunia.com

Author Image
Ilayaraja