சர்வர் சுந்தரம் வெளியீடு தேதியில் மாற்றம்

சர்வர் சுந்தரம் வெளியீடு தேதியில் மாற்றம்

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘டகால்டி’. இப்படம் ஜனவரி 31ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதே தேதியில் சந்தானம் நடிப்பில் உருவான மற்றொரு படமான ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படமும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சர்வர் சுந்தரம் திரைப்படம் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஆனந்த் பால்கி இயக்கியுள்ள சர்வர் சுந்தரம் படத்தில் சந்தானம் ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்திருக்கிறார். பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், சுவாமிநாதன், ராதா ரவி, செஃப் தாமோதரன், வெங்கடேஷ் பாட், மாயா சுந்தரகிருஷ்ணன், பூனம் ஷா, பிரியங்கா ஷா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan