ரஜினியை திடீரென புகழ்ந்த திருமாவளவன்: மாறுகிறதா கூட்டணி

ரஜினியை திடீரென புகழ்ந்த திருமாவளவன்: மாறுகிறதா கூட்டணி

திமுக கூட்டணியில் முக்கிய அங்கமாக இருந்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள் இன்று திடீரென ரஜினியை புகழ்ந்து பேசி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னையில் நடந்த சினிமா விழாவில் விழா ஒன்றில் கலந்து கொண்ட திருமாவளவன் ’சினிமாவில் நடிகர் நடிகைகள் எல்லாம் மினுமினுப்பாக இருக்க வேண்டும் என்ற நிலையை மாற்றியவர் ரஜினிகாந்த் என்றும் ரஜினிகாந்த் ஆள் கலருமில்லை, எம்ஜிஆர் போன்று பளபளப்பாகவும் இல்லை ஆனால் அவரது படம் எப்படி ஓடுகிறது என்ற கேள்வியை பலர் கேட்டு வருகிறார்கள் என்றும் ரஜினிகாந்த் குறித்து திருமாவளவன் கூறியுள்ளார்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கூட்டணிகள் மாறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரஜினி கட்சியில் திருமாவளவன் கட்சி கூட்டணியில் இணையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

The post ரஜினியை திடீரென புகழ்ந்த திருமாவளவன்: மாறுகிறதா கூட்டணி appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy