கமல் பாணியில் ஷாருக்கான்

கமல் பாணியில் ஷாருக்கான்

1/29/2020 10:13:51 AM

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது தனது மதம் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் கூறும்போது, ‘நான் முஸ்லிம், என் மனைவி இந்து, என் குழந்தைகள் இந்தியர்கள். வீட்டில் எப்போதுமே நாங்கள் இந்து, முஸ்லிம் பிரச்சினை பற்றிப் பேசியது இல்லை. ஒருமுறை என் மகள் பள்ளி படிவம் கொண்டுவந்து அதில் கேட்கப்பட்டிருந்த மதம் குறித்த கேள்விக்கு என்ன எழுதுவது என்று கேட்டார்.

நாம் எந்த மதத்தையும் சேர்ந்தவர்கள் இல்லை. நாம் எல்லோரும் இந்தியர்கள் என்று சொன்னதுடன் அதையே பள்ளி படிவத்திலும் எழுதினேன்’ என தெரிவித்துள்ளார். ஷாருக்கானுக்கு ஏற்பட்ட நிலைமை நடிகர் கமல்ஹாசனுக்கும் பல வருடங்களுக்கு முன் ஏற்பட்டது. மகளை பள்ளியில் சேர்க்கும்போது என்ன சாதி என்று கேட்ட கேள்விக்கு இந்தியன் என்று மட்டும் எழுதுங்கள் இல்லாவிட்டால் இந்த பள்ளியில் என் மகளுக்கு சீட்டே வேண்டாம் என்று வாதாடினார். அவரது அந்த வாதத்தை பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.

Source: Dinakaran

Author Image
murugan