கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் சாலை ஆய்வாளர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், இந்த காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

சாலை ஆய்வாளர் – 03 காலியிடங்கள்

சம்பளம் :

ரூ. 19,500 முதல் 62,000/- வரை

கல்வித் தகுதி :

ஐ.டி.ஐ (கட்டுமான வரைதொழில் அலுவலர்) சான்றிதழ் (ITI CIVIL DRAUGHTSMAN) கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். தொலைதூர கல்வி முறை மற்றும் பகுதி நேர படிப்பு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

வயது வரம்பு :

2020 ஜூலை மாதம் 1-ம் தேதி அன்று 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்படிவத்தை https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2020/01/2020012446.pdf தறவிறக்கம் செய்து, விண்ணப்பபடிவத்தை நிரப்பி, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2020/01/2020012446.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

மாவட்ட ஆட்சித் தலைவரின் உதவியாளர் அவர்கள்,
அறை எண் 203,இரண்டாம் தளம்,
மாவட்ட ஆட்சியரகம் ,
கரூர்-639007.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.02.2020 மாலை 5.45 மணி
The post கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy