பாஜகவில் இணையும் பிரபல விளையாட்டு வீராங்கனை!

பாஜகவில் இணையும் பிரபல விளையாட்டு வீராங்கனை!

விளையாட்டு வீரர்கள் அவ்வபோது அரசியலுக்கு வந்து கொண்டிருப்பது குறித்த செய்திகளை நாம் ஏற்கனவே பார்த்து வருகிறோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் முகமது அசாருதீன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதேபோல் அதேபோல் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பாஜகவில் இணைந்து அதன் பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு மாறினார்

சமீபத்தில்கூட கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பாஜகவில் இணைந்து தற்போது டெல்லியில் எம்பியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று பல விளையாட்டு வீரர்கள் அவ்வப்போது அரசியல் கட்சிகளில் இணைந்து வருகின்றனர் அந்த வகையில் தற்போது பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவல் பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

ஏற்கனவே இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமித்ஷாவை தனது குடும்பத்தினர்களுடன் நேரில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சாய்னே விரைவில் பாஜகவில் இணையவிருப்பதாகவும் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
The post பாஜகவில் இணையும் பிரபல விளையாட்டு வீராங்கனை! appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy