தங்கைக்கு வாய்ப்பு தேடும் கதாநாயகி

தங்கைக்கு வாய்ப்பு தேடும் ஹீரோயின்

1/29/2020 12:53:45 PM

துல்கர் சல்மான் நடித்த சோலோ என்ற  படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நேஹா சர்மா. இந்தியில் கிரித்தி, தும் பின் 2, முபாரகன், தன்ஹாஜி உள்பட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வரும் நேஹாவுக்கு சோலோ படத்துக்கு பிறகு கோலிவுட்டில் புதிய படங்கள் எதுவும் தேடிவரவில்லை. பாலிவுட்டில் வருடத்துக்கு 2 அல்லது 3 படங்களில் நடித்துவரும் நேஹா தற்போது தனது தங்கை அயிஷா சர்மாவையும் நடிகையாக்க முயற்சித்து வருகிறார்.

சமீபகாலமாக எங்குசென்றாலும் கூடவே அயிஷாவை அழைத்துச் செல்லும் நேஹா அவருடன் இணைந்தே தனது புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். அயிஷாவும் நடிகைக்கான கட்டுக் குலையாத உடற்கட்டுடன் இருக்கிறார். தவிர மும்பையில் பரபரப்பான மாடல் அழகியாகவும் இருக்கிறார். நேஹாவின் முயற்சியால் தற்போது அயிஷாவுக்கு பட வாய்ப்பு வந்திருக்கிறதாம்.

Source: Dinakaran

Author Image
murugan