சந்தானம் நடித்துள்ள “டகால்டி” படத்தின் உருவாக்கப்படும் காணொளி இதோ!

காமெடியனாக அறிமுகமாகி ஹிரோவாக புரமோஷன் ஆகி வெற்றி பெற்ற நடிகர்களில் ஒருவர் சந்தானம். இவர் ஹீரோவாக நடித்த ‘தில்லுக்கு துட்டு’, ‘சக்க போடு போடு ராஜா’, ‘தில்லுக்கு துட்டு 2’ போன்ற படங்கள் நல்ல வசூலை பெற்றுத்தந்தன. 
 

தற்போது சந்தானம் விஜய் ஆனந்த் டகால்டி படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தை 18 ரீல்ஸ் சார்பாக எஸ்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ரித்திகா சென் என்பவர் நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் யோகி பாபு, ரித்திகா சென், ராதாரவி, தருண் அரோரா, சந்தான பாரதி, மனோ பாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

 

கடந்த சில தினங்களாகவே இப்படத்தின் அப்டேட்டுகளை அடிக்கடி வழங்கி படத்தை தீவிரமாக ப்ரொமோட் செய்துவருகின்றனர். அந்தவகையில் தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் படம் ஜனவரி 31ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

[embedded content]

Source: Webdunia.com

Author Image
Ilayaraja